கொரோனா சிகிச்சை மையம்

4 இடங்களில் அமைக்கப்பட உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2022-01-07 20:34 GMT
மதுரை, 
4 இடங்களில் அமைக்கப்பட உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
தீவிர சிகிச்சை
மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு முன்னேற் பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கன் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு, கலைவாணர் மகப்பேறு மருத்துவமனை மற்றும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவ மனை ஆகிய 4 இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த மையங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வர்களை நோயின் தீவிரத்திற்கு ஏற்றவாறு வகைப்படுத்தி வீடுகளில் தனிமைப்படுத்துதல், கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதித்தல், மருத்துவமனைகளில் அனுமதித்தல் மற்றும் தீவிர சிறப்பு சிகிச்சை அளித்தல் போன்ற நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அபராத கட்டணம்
இந்த 4 மையங்களில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கொரோனா சிகிச்சைக்கு வருபவர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரித்து தினந்தோறும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 
மேலும் ஆஸ்பத்திரி பகுதிகளை சுத்தமாகவும், சுகாதார மாகவும் பராமரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவ லருக்கு உத்தரவிட்டார். மேலும் கமிஷனர் கூறும் போது, மதுரை மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம், தனிநபர் இடைவெளி மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கடந்த 2 நாட்களில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 800 அபராத கட்டணம் வசூலிக்கப் பட்டு உள்ளது. 
ஆய்வு
 6-ந் தேதி ரூ.86 ஆயிரத்து 100-ம், 7-ந்தேதி ரூ.90 ஆயிரத்து 700-ம் வசூலிக்கப்பட்டது என்றார். முன்னதாக கமிஷனர் கார்த்திகேயன் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலத்தில் மழைநீர் வடிகால், நடைபாதை தடுப்புகள், மின் விளக்குகள் பொருத்துதல், வர்ணம் பூசுதல், சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட இறுதி கட்டப்பணிகளை ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின்போது நகர் பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் சேகர், மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புதாய், சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், ராஜ்கண்ணன், உதவிப் பொறி யாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்