1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தங்கல் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-01-07 20:06 GMT
சிவகாசி, 
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் போலீசார் ஆலாவூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் வசித்து வரும் ராஜேஸ்வரன் என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது வீட்டிற்குள் சென்று திடீர் சோதனை செய்தனர். அப்போது ராஜேஸ்வரன் வீட்டில் 1 டன் எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் சங்கரபாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்