தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுைக
பொன்னி நெல்லுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்ததால் தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
சேத்துப்பட்டு
பொன்னி நெல்லுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்ததால் தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று வழக்கம்போல் விவசாயிகள் பல்வேறு வகையான நெல் மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். அதில் 91 லாட்டுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. அதில் குண்டு ரகத்தைச் சேர்ந்த கோ 51, ஆர்.என்.ஆர். ஆகிய ரக நெல் மூட்டைகளை 20 லாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. மீதி உள்ள 71 லாட் டுகள் பொன்னி ரக நெல் மூட்டைகளாகும்.
பொன்னி ரக நெல்லுக்கு வியாபாரிகள் குறைந்த விலையை நிர்ணயம் செய்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் திடீரென ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பி எடுத்துச் சென்றனர்
தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜமாணிக்கம் விரைந்து வந்து விவசாயிகள், வியாபாரிகளை வரவழைத்து விசாரித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதற்கு வியாபாரிகள், பொன்னி நெல்லுக்கு இவ்வளவு தான் விலை நிர்ணயம் செய்ய முடியும், எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.
உடனே விவசாயிகளும் விற்பனை செய்யாமல் 11 லாட் பொன்னி ெநல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு திருப்பி எடுத்துச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.