கலவையில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Update: 2022-01-07 19:13 GMT
 கலவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று  அதிகரித்து வருகிறது இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் தீபா சத்தியன் கலவைக்கு வந்தார். அங்கு நடந்த கொரோனா விழிப்புணர்வு பணிகளைஆய்வு செய்த அவர் பொதுமக்களுக்கும் பஸ்சில் பயணம் செய்தவர்களுக்கும் முக கவசம் வழங்கியதோடு கபசுர குடிநீரும் வழங்கினார்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, சுரேஷ்பாபு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்