திருவட்டார் அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருவட்டார் அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்,
திருவட்டார் அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தொழிலாளி
திருவட்டார் அருகே உள்ள இட்டகவேலி கிறிஸ்டின் காலனியை சேர்ந்தவர் ராஜூ (வயது46), தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்தார். அதன்பின்பு, ராஜூ மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். கடந்த சில நாட்களாக யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
இந்தநிலையில், வாழ்க்கையில் வெறுப்புற்ற ராஜூ நேற்று அதிகாலையில் வீட்டின் பின்பக்கம் உள்ள ரப்பர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
போலீசார் விசாரணை
நேற்று காலையில் ராஜூவின் தாயார் வீட்டின் பின்பக்கம் சென்ற போது, ராஜூவின் பிணம் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப் -இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மனைவி இறந்த தூக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.