புதுக்கோட்டையில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று

புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று உறுதியானது.;

Update: 2022-01-07 18:57 GMT
புதுக்கோட்டை, 
கொரோனா தொற்று அதிகரிப்பு
நாடுமுழுவதும் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 3-வது அலை தொடங்கி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். மேலும், ஊரடங்கில் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. சுகாதாரத்துறையினரால் தினமும் வெளியிடப்படும் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்க பதிவில் இருந்தது. அதிலும் குறிப்பாக 5-க்கு கீழேயும், ஒரு சில நாட்களில் தொற்று பாதிப்பு இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது.
இரட்டை இலக்கத்தில் பதிவு
நேற்று முன்தினமும், நேற்றும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒற்றை இலக்க எண்ணில் இருந்து இரட்டை இலக்க எண்ணிற்கு தொற்று பாதிப்பு மாறி உள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. 
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 960 ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.
முக கவசம்
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில் தடுப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் பல இடங்களில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்