வருகிற 15-ந் தேதி வரை மாணவர் சேர்க்கை

திருவாரூர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வருகிற 15-ந் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது என கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-01-07 18:27 GMT
கொரடாச்சேரி;
திருவாரூர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வருகிற 15-ந் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது என கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார்.  
மாணவர் சேர்க்கை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 15-ந் தேதி(சனிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.  
தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற் பிரிவுகள் ஆகியவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இணைய தளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது. 
சீருடை, மடிக்கணினி
மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து நேரடிசேர்க்கை மூலம் தாங்கள் விரும்பும் தொழிற்பிரிவில் சேர்ந்து கொள்ளலாம். பயிற்சிபெறும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் தையற்கூலி, மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், காலணி மற்றும் பஸ்பாஸ் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படுகின்றன.
 மேலும் இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை  நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்