லாரி கவிழ்ந்ததால் சாலையில் சிதறி கிடந்த ரேஷன் அரிசி மூடைகள்-டிரைவர் தப்பி ஓட்டம்

காரைக்குடி அருகே லாரி கவிழ்ந்ததால் சாலையில் ரேஷன் அரிசி மூடைகள் சிதறி கிடந்தன. டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

Update: 2022-01-07 18:26 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே லாரி கவிழ்ந்ததால் சாலையில் ரேஷன் அரிசி மூடைகள் சிதறி கிடந்தன. டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

லாரி கவிழ்ந்தது

காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் சாலையில் நேற்று அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் லாரியில் ஏற்றி வந்த 60 அரிசி மூடைகள் சிதறி கிடந்தன.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் குன்றக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ரேஷன் அரிசி மூடைகள்

 அரிசி மூடைகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது அவை அனைத்தும் ராமநாதபுரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் என தெரிய வந்தது. அவற்றை போலீசார் குடிமைப்பொருள் தாசில்தார் மூலமாக அரசு வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்