வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன

கொரோனா ஊரடங்கால் நேற்று வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து விட்டு புறப்பட்டனர்.

Update: 2022-01-07 18:24 GMT
திருப்பூர்
கொரோனா ஊரடங்கால் நேற்று வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து விட்டு புறப்பட்டனர்.
பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு நேற்றுமுன்தினம் இரவு முதல் அமலானது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு நேற்று அனுமதி அளிக்கப்படவில்லை.
கோவிலில் வழக்கமான பூஜைகள் நேற்று நடைபெற்றது. கோவில் பிரதான நடை அடைக்கப்பட்டு இருந்தன. கோவில்களுக்குள் பக்தர்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருப்பூரில் சிறப்பு வாய்ந்த ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு இருந்தன. வெள்ளிக்கிழமையன்று அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று கோவில் நடை திறக்கப்படாததால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
வழிபாட்டு தலங்கள் மூடல்
இன்று (சனிக்கிழமை) பெருமாள் கோவில்களில் அதிகளவு கூட்டம் காணப்படும். ஆனால் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
இதுபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்களும் மூடப்பட்டு  இருந்தன. பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், போலீசார் ரோந்துப்பணியை தீவிரமாக மேற்கொண்டனர். அந்தவகையில் கோவில்களில் கூட்டம் கூடுகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்