மாநில மகளிர் சதுரங்க போட்டி

திருவாரூரில் மாநில மகளிர் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்தவர் முதல் இடம் பெற்றார்.;

Update:2022-01-07 23:29 IST
கொரடாச்சேரி;
திருவாரூரில் மாநில மகளிர் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்தவர் முதல் இடம் பெற்றார். 
மாநில மகளிர் சதுரங்க போட்டி
திருவாரூரில் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், திருவாரூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களை சேர்ந்தமாநில மகளிர் சதுரங்க போட்டி  100-க்கும் 
மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த ஜே.சரண்யா முதலிடம் பெற்று தமிழ்நாடு மாநில மகளிர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். மேலும் சென்னையை சேர்ந்த பாலகண்ணம்மா 2-ம் இடத்தை பெற்றார். 3-வது பரிசினை மதுரையை சேர்ந்த மீனாட்சி ராஜம் பெற்றார். 4-வது பரிசை சென்னையை சேர்ந்த சி.லட்சுமி பெற்றார். 
பரிசளிப்பு விழா
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மோகனபிரபா, ஜீவிகா, திவ்யதர்ஷினி, வேதிகா, அபிநயா மற்றும் சிறு வயது பிரிவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிரிஷா, அதிக வயது பிரிவில் சென்னையைச் சேர்ந்த மல்லேஸ்வரி ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் முதலிடம் வெற்ற 4 பேரும் ஆந்திர மாநிலம் பீமா வரத்தில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தமிழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு திருவாரூர் வர்த்தக சங்கத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். 
தமிழ்நாடு சதுரங்க இணைச் செயலர் குணசேகரன் வரவேற்றார். 
மாவட்ட வருவாய் அலுவலர்
திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முருகுவேந்தன், தொழிலதிபர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சாந்தகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், விழாக்குழு செயலாளர் முரளிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்