மணலூர்பேட்டையில் அரசு பஸ்சை வழிமறித்து ரகளை வாலிபர் கைது
மணலூர்பேட்டையில் அரசு பஸ்சை வழிமறித்து ரகளை வாலிபர் கைது
திருக்கோவிலூர்
மணலூர்பேட்டையில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஏழுமலை(வயது 54) என்பவர் பஸ்சை ஓட்டினார். மணலூர்பேட்டையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு வந்தபோது திடீரென வாலிபர் ஒருவர் குடிபோதையில் பஸ்சை வழிமறித்தார். உடனே டிரைவர் பஸ்சை நடுரோட்டில் நிறுத்திவிட்டு கீழே இறங்கி வாலிபரை ஒதுங்கி செல்லுமாறு கூறினார். ஆனால் அந்த வாலிபர் டிரைவரிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். பஸ் நடுரோட்டில் நின்றதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மணலூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் சங்கராபுரம் தாலுகா பெரியமணியந்தல் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்(27) என்பது தெரியவந்தது. குடிபோதையில் பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.