விழுப்புரத்தில் பொதுமக்களை மிரட்டிய ரவுடி கைது
விழுப்புரத்தில் பொதுமக்களை மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார், விழுப்புரம் நேருஜி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் உருட்டுக் கட்டையுடன் நின்றுகொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்ததோடு போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.
உடனே அவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர் விழுப்புரம் கே.கே. சாலை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த பிரசாந்த் (வயது 23) என்பதும், ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிரசாந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.