தடுத்து நிறுத்திய தி.மு.க.வினரால் பரபரப்பு
தடுத்து நிறுத்திய தி.மு.க.வினரால் பரபரப்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரி கிருஷ்ணகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 8 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சி தேர்நிலை திடலில் இருந்து செல்லும் பல்லடம் ரோட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதை அறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அப்போது அவர்கள், கோர்ட்டு 8 வாரங்களுக்குள் போதிய காலஅவகாசம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நோட்டீசு அனுப்பாமல், அவர்களின் கருத்துக்களை கேட்காமல் ஆக்கிரமிப்களை அகற்ற கூடாது என்றனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் சுரேஷ் என்பவர் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் முறையான தகவல் தெரிவிக்காமல் கடை முன் வைக்கப்பட்டு இருந்த விலையுர்ந்த பெயர் பலகையை நெடுஞ்சாலைத்துறையினர் சேதப்படுத்தியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.