கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக விழுப்புரம் நகராட்சி பூங்காக்கள் பூட்டி சீல் வைப்பு

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக விழுப்புரம் நகராட்சி பூங்காக்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-01-07 16:40 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் நகரில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று நேற்று மாலை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், பஸ்சிற்காக காத்து நிற்கும் பயணிகள் முககவசம் அணிந்துள்ளனரா என பார்வையிட்டார். முககவசம் அணியாத பயணிகளிடம் முககவசம் வழங்கி கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடமான விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பூந்தோட்டம் நகராட்சி பூங்காவில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக அந்த பூங்காவை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், பூட்டி சீல் வைத்தார். 

இதேபோல் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள நகராட்சி பூங்காவும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, சுகாதார ஆய்வாளர்கள் திண்ணாயிரமூர்த்தி, ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்