தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

Update: 2022-01-07 16:19 GMT
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சி அருகே உள்ள சி.கோபாலபுரத்தில் இருந்து வலசுபாளை யம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் விவசாயி கள் விளை பொருட்களை கொண்டு சென்று வருகின்றனர். இந்த நிலை யில் சாலை படுமோசமாக இருப்பதால் விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, வடக்கிபாளையம்

தேங்கி கிடக்கும் குப்பைகள்

  பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங் கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் தேங்கும் குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மாரியப்பன், சின்னாம்பாளையம்

தாமதமாகும் சாலை பணிகள்

  பொள்ளாச்சி கோவை ரோடு சக்திமில் சந்திப்பில் இருந்து ஆர்.பொன்னாபுரம் வழியாக ஜமீன்ஊத்துக்குளி வரை மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பணிக்காக ஜல்லி கற்கள் கொட்டி வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் சாலை அமைக்கும் பணி தொடங்கவில்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ரஞ்சித், நல்லிகவுண்டன்பாளையம் 

தார்ச்சாலை வேண்டும்

  கோவை 43-வது வார்டு ஹவுஸிங் காலனி, ராதாகிருஷ்ணன் வீதி, கொண்டசாமி வீதி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்காரணமாக தெருக்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது எனவே மேற்கண்ட பதிவில் உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
  செந்தில், வெங்கடாபுரம்.

போக்குவரத்து பாதிப்பு

  கோவை ரெயில் நிலையம் அருகே குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. இந்த பணி மெதுவாக நடந்து வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
  ஜோயல் - ரேஸ்கோர்ஸ்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் நிறைந்து உள்ளது. அத்துடன் அதன் அருகே குப்பைகள் குவிந்து கிடப்பதால், அவை காற்றில் பறக்கிறது. மேலும் அங்கு கடும் துர்நாற்றம் வீசவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
  சுதாகர், கோவை.

சாலையில் அபாய குழி

  கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள அவினாசி மேம்பாலத்தின் கீழ், ரவுண்டானா பகுதியில் சாலையில் குழி உள்ளது. இதனால் அந்த வழி யாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அங்கு அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அபாயகரமான நிலையில் உள்ள அந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சாந்தி, கோவை.

ஒளிராத மின்விளக்குகள்

  கோவை உக்கடத்தில் இருந்து சுண்டக்கா முத்தூர் செல்லும் சாலையில் ஏராளமான மின்விளக்குகள் உள்ளன. இதில் பல விளக்குகள் இரவில் ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியாக செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
  பாலமுரளி. சுண்டக்காமுத்தூர்.

துர்நாற்றம் வீசும் கழிப்பிடம்

  பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் உள்ள இலவச சிறுநீர் கழிப்பிடம் முறையாக கழுவி பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், அதற்குள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக இங்கு செல்லும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
  துரைராஜ், பொள்ளாச்சி.

மேலும் செய்திகள்