100 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவு

நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-01-07 16:07 GMT
நாகப்பட்டினம்:
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாகை நகராட்சிக்குட்பட்ட வடக்கு பால்பண்ணைச்சேரி தியாகராஜர் நகர், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களின் வீடுகளுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ்  சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நோய்த்தொற்றின் அறிகுறிகள் குறித்தும் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டறிந்தார். 
தொடர்ந்து நாகை  அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவினையும் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் பார்வையிட்டும், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
 மேலும் ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவினையும் ஆய்வு செய்து அங்குள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரிக்குமாறும், மருத்துவ பொருட்கள் வைப்பறையில் முககவசம், இதர மருத்துவ பொருட்கள் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார். 
பின்னர் நகராட்சி காடம்பாடி பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக்கடை, தெற்கு பால்பண்ணைச்சேரி பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக்கடை ஆகியவற்றில் ஆய்வு செய்து அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். 
இந்த ஆய்வின் போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபாலன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்