மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் பாய் வியாபாரி உடல்நசுங்கி பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் பாய் வியாபாரி உடல்நசுங்கி பலியானார். அவரது பேரனுக்கு படுகாயம் ஏற்பட்டது.;
காரைக்கால், ஜன.
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் பாய் வியாபாரி உடல்நசுங்கி பலியானார். அவரது பேரனுக்கு படுகாயம் ஏற்பட்டது.
பஸ் மோதல்
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பிடாரி கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது அலி (வயது 55). பாய் வியாபாரி. இவர் தனது பேரன் பகத் அகமதுவை (6), காரைக்கால் தருமபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார்.
திருநள்ளாறு வழிகரை அம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமதுஅலி மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது.
பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிறுவன் பகத்அகமது சாலையோரம் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தான்.
டிரைவர் கைது
விபத்து பற்றி தகவல் அறிந்த காரைக்கால் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார், அங்கு சென்று காயமடைந்த சிறுவனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான முகமது அலியின் உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் காரைக்கால் விழிதியூர் தெற்கு தெருவை சேர்ந்த கலைச்செல்வனை (27) போலீசார் கைது செய்தனர்.