முன்னாள் கவுன்சிலர் கைது
தூத்துக்குடியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முன்னாள் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எட்டயபுரம் ரோட்டில் வைத்து மில்லர்புரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 59) என்பவர் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். உடனடியாக போலீசார் கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 230 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கமலக்கண்ணன் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.