கொடிநாள் நிதி வழங்கல்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் கொடிநாள் நிதி வழங்கப்பட்டது

Update: 2022-01-07 15:03 GMT
திருச்செந்தூர்:
முன்னாள் ராணுவத்தினரின் குடும்ப நலனுக்காக ஆண்டுதோறும் கொடிநாள் நிதி சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகளிடம் கொடிநாள் நிதி சேகரிக்கப்பட்டது.
அதனை திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தாசில்தார் சுவாமிநாதன் ஆகிேயாரிடம் கல்லூரி முதல்வர் மகேந்திரன் அறிவுரையின்பேரில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கதிரேசன், மருதையா பாண்டியன், அபுல்கலாம் ஆசாத், மாணவ செயலர் முகுந்தன் மற்றும் மாணவர்கள் வழங்கினர்.

மேலும் செய்திகள்