ஆவடி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு
ஆவடி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.
சென்னை வில்லிவாக்கம், செங்குன்றம் சாலையில் வசித்து வந்தவர் ஜானகிராமன் (வயது 54). இவர், ஆவடியை அடுத்த அண்ணனூர் ரெயில்வே பணிமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை இவர் டீ குடிப்பதற்காக அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஜானகிராமன் பலியானார். இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.