பெண் மீது ஆசிட் வீச்சு

பெண் மீது ஆசிட் வீச்சு

Update: 2022-01-07 13:54 GMT

கோவை

கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய மர்ம ஆசாமியை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

கட்டிட தொழிலாளி

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவருடைய மனைவி ராதா (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

குடும்ப பிரச்சி னை காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இதனால் ராதா, கணவரை பிரிந்து கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு கோவை அம்மன்குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.

மேலும் அவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். 

பின்னர் அவர் பொருட்கள் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர், திடீரென்று ராதாவை வழிமறித்தார்.

ஆசிட் வீச்சு

பின்னர் அவர், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராதா வின் மீது வீசினார். இதில் ராதாவின் இடதுபக்க முகம், தோள்பட் டை மீது ஆசிட் பட்டு படுகாயம் அடைந்து வலியால் அலறித்துடித் தார். 

அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்த னர். அதற்குள் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்த தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து காயமடைந்த ராதாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 தனிப்படை

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண் மீது ஆசிட் வீசிய மர்ம ஆசாமியை பிடிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவுப் படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசார ணை நடத்தி வருகிறோம். 

குடும்ப பிரச்சினை காரணமாக ஆசிட் வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது உள்பட பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

மேலும் செய்திகள்