தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

Update: 2022-01-07 13:39 GMT

கோவை

கோவை மாநகராட்சி 80-வது வார்டு ரங்கே கவுடர் வீதியில் கடந்த 30-ந் தேதி பெண் தூய்மை பணியாளர் ஒருவர் வடமாநில தொழிலாளியால் தாக்கப்பட்டார். இதுகுறித்து வடமாநில தொழிலாளி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட் டது. 

அந்த சம்பவம் தொடர்பான மற்றொரு புகாரில் கோவை மாநக ராட்சி தூய்மை பணியாளர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

 அவர்களை போலீசார் கைது செய்ய உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி தூய்மை பணியாளர்கள் 80-வது வார்டு அலுவலகத்தில் நேற்று காலை ஒரு மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்