ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு(பயிற்சி) சங்கர் கணேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஓடத்தொடங்கிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் காலனி தெருவை சேர்ந்த காமராஜின் மகன் பிரபாகரன், ஜெயங்கொண்டம் காந்தி நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கணேசன் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.