வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
தஞ்சை அருகே ஆடு மேய்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே ஆடு மேய்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
பாலியல் பலாத்காரம்
தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலைய பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் 30-8-2015 அன்று ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா சித்திரக்குடி அருகே உள்ள குணமலங்கம் நடுத்தெருவை சேர்ந்த மணவாளன் மகன் வினோத்குமார் (வயது 28) வந்தார்,
பின்னர் வினோத்குமார் அந்த பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு கூறி உள்ளார். அதற்கு மறுத்ததால் அந்த பெண்ணை மிரட்டி தாக்கியதோடு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
10 ஆண்டுகள் சிறை
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜன், விசாரித்து வினோத்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையில் ரூ.80 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.