லாரி மோதியதில் மின்கம்பம் சேதம்
பாவூர்சத்திரத்தில் லாரி மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்தது.;
பாவூர்சத்திரம்:
முக்கூடல் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தென்காசி நோக்கி வந்தது. லாரியை பரப்பாடியை சேர்ந்த டிரைவர் பெருமாள் ஓட்டினார். பாவூர்சத்திரம் தபால் அலுவலகம் அருகே டீ குடிப்பதற்காக டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி தானாக நகர்ந்து சென்று அருகில் உள்ள மின்கம்பம் மற்றும் சுவரில் மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து விழுந்து சேதம் அடைந்தது. சுவரும் இடிந்து விழுந்தது. இதுதொடர்பாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்இணைப்பை துண்டித்தனர். பின்னர் புதிய மின்கம்பத்தை நட்டு, மின்இணைப்பை சரிசெய்தனர். இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.