‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் இயக்கப்படுமா?
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஆமத்தூருக்கு செல்ல குறைவான அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், மதுரை.
மின்தடை
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும், மாணவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். குடும்ப ெபண்களின் அன்றாட வீட்டு பணிகளும் பாதிக்கப்படுகிறது. சிறு, குறு ெதாழிலாளர்கள் மின்சாரத்தைேய நம்பி ெதாழில் புரிகின்றனர். எனவே இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபான்னுசாமி, சூலக்கரை.
தெருவிளக்கு தேவை
மதுரை பாரதிதாசன் சாலை இ.எஸ்.ஐ. மருத்துவமனையை அடுத்த அழகிசுந்தரம் நினைவு நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள பாதையில் தெருவிளக்கு வசதி இல்லை. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். சமூக விரோதிகள் இருட்டை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்துகளும் நடக்கிறது. எனவே, இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்கவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, சிட்டாலாட்சிநகர்.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட குஜிலம்மடம் முதல் அய்யனார்புரம் வழியாக புதூர் செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இந்த வழியே வாகனங்களில் செல்லும் முதியவர்களும், கர்ப்பிணிகளும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பிரசாந்த், அய்யனார்புரம்.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மெயின்ரோடு அருகில் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இப்பகுதியின் அருகே பள்ளியும் உள்ளதால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
சரவணன், தேவகோட்டை.
தெருநாய்கள் தொல்லை
மதுரை திருநகர் பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்தும் போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாலையின் குறுக்கே நாய்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
முத்துலட்சுமி, மதுரை.