தென்காசியில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு
தென்காசி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 27 ஆயிரத்து 460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் நேற்று 2 பேர் உள்பட இதுவரை 26 ஆயிரத்து 934 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 40 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 486 பேர் இறந்துள்ளனர்.