நெல்லையில் 16 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-01-06 19:52 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றக்கூடிய 3 செவிலியர்கள் உள்பட 16 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்து 917ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 146 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 436 பேர் இறந்துள்ளனர்.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று தனியாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 6 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் யாருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்படவில்லை. அவர்களுடைய சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்