அதிக அளவில் வளர்ந்துள்ள பிரண்டை செடிகள்
வெம்பக்கோட்டை பகுதிகளில் அதிக அளவில் வளர்ந்துள்ள பிரண்டை செடிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.;
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதிகளில் அதிக அளவில் வளர்ந்துள்ள பிரண்டை செடிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதிக வரவேற்பு
மருத்துவ குணமுள்ள கொடி வகையை சேர்ந்த பிரண்டை செடிகள் காட்டு பகுதியில் தொடர் மழை காரணமாக அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனை பூசாரி நாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, சல்வார்பட்டி, நரிக்குடி, பார்த்திபனூர், திருச்சுழி, வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சேகரித்து கிலோ ரூ.25 வரை விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:-
மருத்துவ குணம் வாய்ந்த பிரண்டை செடிகளுக்கு ஜெர்மன், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் அதிக வரவேற்பு உள்ளது.
மருத்துவ குணம்
மேலும் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவு பிரண்டை செடிகள் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளோம்.
இந்த ெசடி தானாக வளரக்கூடியது. .இதற்கு எவ்வித மருந்தும் தெளிக்க வேண்டியதில்லை. இதனை பறித்து ஆரம்பக்கட்டத்தில் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு காயவைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பிரண்டை செடிகள் கால்சியம் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எலும்பு பலவீனமாகும். கால்சியம் குறைபாடு சரி செய்ய பிரண்டை செடிகள் உதவுகின்றன. அத்துடன் இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.