முக கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு அபராதம்
விருதுநகரில் முக கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ெரயில் நிலையங்களில் முக கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு தமிழக அரசின் கட்டுப்பாடு விதிகளின்படி அபராதம் விதிக்குமாறு ெரயில்வே போலீஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் ெரயில் நிலையத்தில் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் தலைமையில் போலீசார், முககவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்து அவர்களை தொடர்ந்து முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தினர்.