ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை இயக்குனர் ஆய்வு

முதுகுளத்தூர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை இயக்குனர் ஆய்வு நடத்தினார்.;

Update: 2022-01-06 18:34 GMT
முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேரிருவேலி, திருவரங்கம் மற்றும் கமுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ராமாவரம் மாவட்ட துணை இயக்குனர் ரமேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், காசநோயாளிகளை கண்டறியவும் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைத்திடவும் வழிவகை செய்திட மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் காசநோய் நிலையை கண்டறிந்து அவர்களுக்கு இலவச மருந்துகளும் அரசு வழங்கும் உதவித்தொகையும் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என கூறினார். ஆய்வின்போது மாவட்ட காசநோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் முகம்மது வாகித், தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் காசி, காசநோய் முதுநிலை மேற்பார்வையாளர் மோகன பாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்