பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
கமுதி அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.;
கமுதி,
கமுதி அடுத்துள்ள பசும்பொன் காலனியை சேர்ந்தவர் சடை முனீஸ்வரன் (வயது 29). இவருடைய மனைவி கற்பகஜோதி (22). இவர் மதுபோதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக கற்பக ஜோதியை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கமுதி போலீசார் சடை முனீஸ்வரனை ைகது செய்தனர்.