திருச்செங்கோட்டில் விஷம் குடித்து விசைத்தறி தொழிலாளி சாவு
திருச்செங்கோட்டில் விஷம் குடித்து விசைத்தறி தொழிலாளி இறந்தார்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு சட்டையும் புதூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 51) விசைத்தறி தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை குடும்பத்தினர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நடராஜனுக்கு பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.