வேலூர் சரகத்தில் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

Update: 2022-01-06 18:08 GMT
வேலூர்

வேலூர் சரகத்தில் பணியாற்றி வரும் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் அருண்குமார் வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் திருமால் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், கீழ்கொடுங்கலூர் இன்ஸ்பெக்டர் புகழ் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றி வரும் முத்துக்குமார் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும், வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பாகாயம் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள முனிஸ்வரன் தேசூர் போலீஸ் நிலையத்திற்கும், சாந்தி நாட்றம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கும், சுரேஷ் சண்முகம் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், ராஜா கீழ்கொடுங்கலூர் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை
வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்