தர்மபுரியில் சமூக நல்லிணக்க மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் சமூக நல்லிணக்க மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-01-06 18:01 GMT
தர்மபுரி:
சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து சமூக நல்லிணக்க மேடை சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின்‌ மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், சமூக நல்லிணக்க மேடை மாவட்ட பொறுப்பாளர் சிசுபாலன், முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சுபேதார், சமூக நல்லிணக்கமேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இ.பி.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும், வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீதும், வன்முறையில் ஈடுபடுவோர் மீதும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நல்லம்பள்ளி ஒன்றியசெயலாளர் பொன்சுரேஷ், நகர துணை செயலாளர் ஆறுமுக பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ஜோதிபாசு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டசெயலாளர் மல்லையன், சமூக சேவை மைய பொறுப்பாளர் ஜேசுதாஸ், மக்கள் பாடகர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்