மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-01-06 17:58 GMT
இளையான்குடி,

பரமக்குடியில் இருந்து தாயமங்கலத்துக்கு அரசு டவுன் பஸ் வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ் இளையான்குடி பஸ் நிலையத்தில் நின்ற போது பயணிகள் பஸ்சை விட்டு கீழே இறங்கினர். அப்போது பஸ்சை விட்டு கீழே இறங்கிய அ.திருவுடையார்புரத்தை சேர்ந்த நாகசாமி மனைவி வள்ளி(60) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை 3 பெண்கள் திருட முயன்றனர். இதை கவனித்த டிரைவர் சத்தம் போட்டதால் பொதுமக்கள் அந்த பெண்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்ற வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மனைவி செல்வி(32), பொன்னழகு மனைவிகள் சாந்தி (30), வள்ளி (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

.

மேலும் செய்திகள்