எலி மருந்து தின்று பெண் தற்கொலை

சிங்கம்புணரி அருகே எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-06 17:55 GMT
சிங்கம்புணரி,

 சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடவன்பட்டியை சேர்ந்தவர் அருள்செல்வம். இவருடைய மனைவி வைஷ்ணவி (வயது 25).இவர்களது மகன் தர்னிஷ்(4). வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக அருள்செல்வம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த வைஷ்ணவி எலி மருந்தை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து எஸ்.எஸ். கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 5½ ஆண்டுகள் ஆவதால் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்