மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம்: குளத்தில் மூழ்கி விவசாயி சாவு

மீன்பிடிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-01-06 22:49 IST
திருவரங்குளம்:
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள பூவரசகுடி கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 53). விவசாயி. இவர் நேற்று காலை வயலுக்குச் சென்று வயல் வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்தார். பின்னர் அருகிலுள்ள குளத்தில் மீன் பிடிப்பதற்கு குளத்தில் இறங்கி வலை விரித்து கொண்டிருந்த போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். 
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி இறந்த நாகலிங்கத்தின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வல்லத்திரா கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்