தனியாக வசித்து வந்த கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மர்மசாவு

புதுவை கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-06 16:58 GMT
புதுச்சேரி, ஜன.
புதுவை    கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராசிரியர்
புதுவை குருமாம்பேட் கால்நடை அரசு ஆஸ்பத்திரியில் பேராசிரியராக பணியாற்றியவர் சுராமணி திவாரி (வயது 62). வடமாநிலத்தை சேர்ந்த இவர் அய்யங்குட்டிபாளையம் அமைதி நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சுராமணி திவாரி வழுதாவூர் சாலையில் கடை நடத்தி வரும் மாணிக்கம் என்பவருடன் நட்பாக பழகி வந்தார். அவரது    கடைக்கு கடந்த 2-ந் தேதி வந்த சுராமணி திவாரி, அதன்பிறகு வரவில்லையாம்.
அழுகிய நிலையில்...
இந்த நிலையில் சுராமணி திவாரியின் மகன் மாணிக்கத்திற்கு போன் செய்து, தனது தந்தை செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. எனவே அவர் வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறினார். உடனே மாணிக்கம், சுராமணி திவாரி வீட்டிற்கு சென்று      பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. கதவை நீண்ட நேரம் தட்டியும் யாரும் திறக்கவில்லை.     பின்னர்  ஜன்னல் வழியாக வீட்டினுள்     மாணிக்கம் எட்டிப்பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் சுராமணி திவாரி   தரையில்  குப்புறப் படுத்த நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரணை
இது பற்றி மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து, அழுகிய நிலையில் இருந்த சுராமணி திவாரி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராமணி திவாரி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்