உளுந்தூர்பேட்டை அருகே நர்சிங் மாணவி மாயம் கடத்தப்பட்டாரா போலீஸ் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே நர்சிங் மாணவி மாயம் கடத்தப்பட்டாரா போலீஸ் விசாரணை
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடகுறும்பூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் பகுதியில் வசிக்கும் தனது தாத்தாவை சந்தித்து விட்டு கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை. இது குறித்து எலவனாசூர் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.