தியாகதுருகத்தில் புகையிலை பொருள் விற்ற மளிகை கடைக்கு சீல் உரிமையாளர் கைது
தியாகதுருகத்தில் புகையிலை பொருள் விற்ற மளிகை கடைக்கு சீல் உரிமையாளர் கைது
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் அண்ணாநகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கே 85 பாக்கெட் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மளிகை கடை உரிமையாளர் சங்கராபுரம் அருகே சூ.பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகன் ஏழுமலை(வயது 37) என்பவரை கைது செய்த போலீசார் 85 பாக்கெட் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர்.