கடலில் மூழ்கி வாலிபர் சாவு
வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
வேளாங்கண்ணி:
வேலூர் மாவட்டம் பொன்னை ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி. இவருடைய மகன் லோகேஷ்(வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சுரேஷ் என்பவரின் குடும்பத்தினருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார்.அங்கு லோகேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் கடலில் குளித்தனர். அப்போது அவர்களை கடல் அலை இழுத்து சென்றது. இதை பார்த்து அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் சந்தோசை மீட்டனர். ஆனால் லோகேசை மீட்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து போலீசார் கடலில் இறங்கி லோகேசை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிறிது நேரத்தில் லோகேஷ் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லோகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருடன் மீட்கப்பட்ட சந்தோஷ் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.