சின்னமனூரில் மின் வாரியம் சார்பில் சிறப்பு முகாம்

சின்னமனூரில் மின் வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-01-06 15:22 GMT
சின்னமனூர்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இந்த திட்டத்தின் கீழ் சின்னமனூர் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்களுக்கு இலவச மின் இணைப்பிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதையடுத்து விவசாய நிலங்களின் சர்வே என் மாற்றம் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறுகள் மாற்றம் குறித்து மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மணிமேகலை தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் சண்முகம், சின்னமனூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பெயர் மாற்றம் மற்றும் சர்வே எண் மாற்றத்திற்கான சான்றிதழ்களை பெற்றனர். முகாமில் மின்வாரிய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்