டாக்டர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது
டாக்டர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை தத்தனேரி பர்மா காலனியை சேர்ந்தவர் பழனிக் குமார் (வயது 47). இவரது மகன் கமலேஸ்வரன் (22). சம்பவத் தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (31) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மேலூர் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து கமலேஸ்வரனுக்கு உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக பழனிக்குமார் அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் அங்கிருந்த டாக்டர் கவுதமை தாக்கி விட்டு மகன் கமலேஸ்வரனை வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி மேலாளர் அழகுமணி போலீசில் புகார் அளித் தார். அதன் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் கமலேஸ்வரன் மாப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும், அவரது தந்தை பழனிக்குமார் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் செல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் செல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த பழனிக்குமார், புருஷோத்தமன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.