கடமலைக்குண்டு:
வருசநாட்டை சேர்ந்தவர் வீரணன் (வயது 70). விவசாயி. கடந்த ஆண்டு வீரணனின் மனைவி இறந்து போனார். அதன் பின்னர் வீரணன் அவருடைய மூத்த மகன் ஆண்டிச்சாமி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி இறந்ததால் மனம் உடைந்த வீரணன் தனிமையை விரும்பாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.