பெண்ணை கற்பழித்த 2 பேருக்கு 20 ஆண்டு சிறை

பெண்ணை கற்பழித்த 2 பேருக்கு 20 ஆண்டு சிறை

Update: 2022-01-06 14:12 GMT

கோவை

கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி அழைத்துச் சென்று பெண் ணை கற்பழித்த 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பெண் கற்பழிப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதி யை 28 வயது பெண்ணுக்கும், அவருடைய கணவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்தது. 

இந்நிலையில், கடந்த 16.7.2016 அன்று அந்த பெண்ணை, கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி, அவரது குடும்ப நண்பர்களான விமல்ராஜ் (31), கார்த்திக் (28) ஆகியோர் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர். 

அப்போது, அங்குள்ள ஒரு காட்டு பகுதிக்கு அழைத்து சென்று இரவு 7 மணியளவில் அந்த பெண்ணின் கை, கால்களை பெல்ட்டால் கட்டி உள்ளனர். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்துள்ளனர்.

 பின்னர், நிர்வாண நிலையில் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி சென்று விட்டனர்.

20 ஆண்டு சிறை

பின்னர் அந்த பெண் தனது கட்டுகளை அவிழ்த்து விட்டு அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த பெண்ணிடம் தனக்கு நடந்த சம்பவம் பற்றி கூறி அழுதார். அவர், அந்த பெண்ணுக்கு ஆடைகள் கொடுத்து ஆறுதல் கூறினார். 

இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மேற்குப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஜாமீனில் வெளிவந்த கார்த்திக் அதன்பிறகு கோர்ட்டில் ஆஜராக வில்லை. இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விமல்ராஜ், கார்த்திக் ஆகிய 2 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

போலீசாருக்கு பாராட்டு

அபராதத்தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கவும், அரசு சார்பில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண உதவியை சட்ட உதவி மையம் மூலம் பெற்றுக் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் குற்றவாளி கார்த்திக்கிற்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்ற னர். தண்டனை விதிக்கப்பட்ட விமல்ராஜ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி.ஜிஷா ஆஜராகி வாதாடினார். 

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த போலீசாருக்கு கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்