அனகாபுத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

Update: 2022-01-06 10:56 GMT
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பிரதான சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்மநபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் பணத்தை திருட முடியாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். 

நேற்று காலை ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏ.டி.எம். மையம் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்