அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-05 20:22 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஏ மற்றும் பி பிரிவினருக்கு முன்பு வழங்குவதை போல் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கிளை தலைவர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்