ராஜேந்திரபாலாஜியை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு?

கைது செய்யப்பட்ட ராேஜந்திரபாலாஜியை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.;

Update: 2022-01-05 20:16 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நடுவர் எண்-2 கோர்ட்டில் அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. எனவே ராஜேந்திரபாலாஜியும் அந்த கோர்்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என தெரிகிறது.
ராஜேந்திரபாலாஜியை ஆஜர்படுத்தும் போது அவரது ஆதரவாளர்கள் திரளலாம் என்பதால் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்