நெடுஞ்சாலை துறையினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலை துறையினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் பாளையங்கோட்டையில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் பழனியப்பன், மாநிலச் செயலாளர் செய்யது யூசுப்கான், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கிலோமீட்டருக்கு 2 சாலை பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி கிராம இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.